WHAT NEW IN X11.05 THU

AI collections from X · 23 collections · 69,408 posts

personal-agentPOST

Tamil blogger compares Meta Muse, Grok Bot, ChatGPT Dots and Claude Duet

A rundown of four personal AI agents — Meta Muse, Grok Bot, ChatGPT Dots and Claude Duet — with pricing from free to $100/month and a Muse demo that made a video and uploaded it to Google Drive.

Abdul Basith
@bloggerbasithArchived 6 days agoOriginally posted 2026.10.29
Abdul Basith @bloggerbasithOriginally posted 2026.10.29
Open original on X

இதுவரைக்கும் AI-கிட்ட ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லும். ஒரு வேலை செய்யச் சொன்னா, அதை எப்படி செய்யணும்னு சொல்லிக் கொடுக்கும். ஆனா இப்ப வர்ற AI Agents அப்படியில்ல. நாம சொல்ற வேலையை அதுவே செய்து முடிக்கிற அளவுக்கு வந்துடுச்சு. 😄 உதாரணத்துக்கு, Muse AI-கிட்ட ஒரு Content Topic கொடுத்து, இதை வீடியோவா Create பண்ணி, ரெடியானதும் என் Google Drive-ல Upload பண்ணிடுன்னு சொல்லிட்டேன். சொல்லிட்டு PC-யும் Off பண்ணிட்டேன். அப்புறம் Google Drive-ல போய் பார்த்தா, வீடியோ ரெடியா இருந்துச்சு. 😂 இது ஒரு சின்ன Example தான். Research, Content Creation, Email, Website வேலைகள், Files Manage பண்றது, நமக்காக பல Tools-ல வேலை செய்றதுனு இன்னும் ஏகப்பட்ட விஷயங்களை AI Agents மூலம் செய்ய முடியும். **இப்ப எந்தெந்த AI Agents இருக்கு? Free-ஆ? Paid-ஆ?** **1. Meta Muse AI** Facebook, Instagram-ஐ உருவாக்கின Meta-வோட AI Agent. Free-ஆ பயன்படுத்தலாம். ஆனா Usage Limit இருக்கு. அதிகமா பயன்படுத்த $20/Month, $100/Month Paid Plans இருக்கு. இப்போதைக்கு US-ல Rollout ஆகிட்டு இருக்கு. இந்தியாவுக்கு இன்னும் Official Access வரல. **2. Grok Bot** Grok AI-யோட AI Agent. இதுவும் நமக்காக பல வேலைகளை Background-ல செய்யும். PC Off பண்ணினாலும் Cloud-ல வேலை தொடரும். SuperGrok $30/Month Plan-ல இருந்து Access கிடைக்கும். சில Cursor Paid Plans-லயும் கிடைக்கும். Desktop, Mobile இரண்டிலும் பயன்படுத்தலாம். Beta Version-ல இருக்கு. Country, Plan பொறுத்து Availability மாறலாம். **3. ChatGPT Dots** நம்ம ChatGPT-யை உருவாக்கின OpenAI-யோட AI Agent. இது 24 மணி நேரமும் நமக்காக வேலை செய்யக்கூடியது. நம்ம விருப்பங்களையும், வேலைகளையும் நினைவில் வச்சுக்கிட்டு தொடர்ந்து உதவும். ChatGPT Pro $100/Month Plan-ல இருந்து Access கிடைக்கும். முதல் Dot-க்கு தனியா பணம் கட்ட வேண்டியதில்லை. Eligible Countries-ல படிப்படியா Rollout ஆகிட்டு இருக்கு. எல்லா Users-க்கும் இன்னும் Access கிடைக்கல. **4. Claude Duet** நம்ம Claude AI-யை உருவாக்கின Anthropic-வோட புதிய AI Agent. Email, Calendar, Research, Business வேலைகள்னு நிறைய விஷயங்களை கவனிச்சுக்கும். முக்கியமான விஷயம் இருந்தா நாம கேட்காமலேயே வந்து சொல்லும். Claude Pro $20/Month, Max $100/Month முதல் இருக்கு. Duet-க்கு தனியா Subscription Fee இல்லை. ஆனா இப்போதைக்கு US-ல Pro, Max Users-க்கு Waitlist மூலம்தான் Access கொடுக்கிறாங்க. இந்தியாவுக்கு இன்னும் வரல. இவங்களுக்கு தேவையான Tools Access, Permission கொடுத்துட்டா, ஒவ்வொரு Step-க்கும் நாம சொல்லிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. அதுவே Plan பண்ணி அடுத்தடுத்து வேலைகளைச் செய்யும். முக்கியமான சில வேலைகளுக்கு மட்டும் நம்ம Approval கேட்கும். ஒரு விஷயம், Paid Plan வாங்கிட்டா எல்லா வேலைகளையும் Unlimited-ஆ செய்யலாம்னு அர்த்தம் இல்ல. Usage Limits இருக்கு. அதே மாதிரி AI Agents சில நேரம் தப்பும் செய்யலாம். அதனால முக்கியமான வேலைகளை நாம Verify பண்ணிக்கிறது நல்லது. இதுவரைக்கும் AI-யை நாம ஒரு Assistant மாதிரி பயன்படுத்திட்டு இருந்தோம். ஆனா இப்ப நமக்காகவே வேலை செய்யுற Digital Employee மாதிரி மாறிட்டு வருது. **AI-கிட்ட எப்படி செய்யணும்னு கேட்ட காலம் போய், இதை செஞ்சு முடிச்சிடுன்னு சொல்ற காலம் வந்துடுச்சு.** 🤖 இது வெறும் ஆரம்பம் தான். இன்னும் நிறைய மாற்றங்கள் வரப்போகுது.

x.com/bloggerbasith/status/2115688172940312870Archived 2026.10.30 10:41