WHAT NEW IN X11.05 THU

AI collections from X · 22 collections · 67,905 posts

jevIMAGE

Jev as AI's System 1: a Tamil-language explainer

A Tamil-language article explains Jev through Kahneman's dual-system theory: it takes text or JSON plus a bounded question and returns a probabilistic Choice or Score decision instead of chatting.

Dr. Senthazal Ravi
@senthazalraviArchived 2026.09.25Originally posted 2026.09.24
Jev as AI's System 1: a Tamil-language explainer
Dr. Senthazal Ravi @senthazalraviOriginally posted 2026.09.24
Open original on X

TypeSafe AI நிறுவனத்தின் Jev (ஜெவ்) முடிந்தவரை எளிய கட்டுரை.. Jev: செயற்கை நுண்ணறிவின் 'சிஸ்டம் 1' புரட்சி செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் உருவாக்கப்படும் பெரும்பாலான மாதிரிகள் பெரிய கட்டுரைகளை எழுதவோ, உரையாடல்களை மேற்கொள்ளவோ அல்லது சிக்கலான உரைநடைகளை உருவாக்கவோ வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், செப்டம்பர் 2026-இல் TypeSafe AI அறிமுகப்படுத்திய Jev முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய பாதையை அமைத்துள்ளது. Jev என்பது பயனர்களுடன் உரையாடும் ஒரு சாட்பாட் (Chatbot) அல்ல; அது எந்தவொரு உரையையும் புதிதாக எழுதாது. மாறாக, மென்பொருள் அமைப்புகள் மிக விரைவாகவும் துல்லியமாகவும் முடிவுகளை எடுக்க உதவும் ஒரு "AI if-statement" ஆக செயல்படுகிறது. (இது ஒரு மூளை, சரி தவறு என்று சொல்லுமே தவிர இதுவே சாட் பாட் அல்ல) டியாகோ ஆள்மெட்டா Diogo Almeida இதனை முதலில் அறிவித்தார். அது பற்றிக்கொண்டது. ஆனால் இது பற்றி முன்பே அறிவித்த ஒரு மாடல் (கேரளா பையன்) பெரிதாக popular ஆகவில்லை. பெயர்க் காரணம் : பிரபல உளவியலாளர் டேனியல் கேன்மேனின் (Daniel Kahneman) சிந்தனைக் கோட்பாட்டிலிருந்து இதன் பெயர் உருவாக்கப்பட்டது: System 1 (சிஸ்டம் 1): மனித மூளையின் வேகமான, உள்ளுணர்வு சார்ந்த, உடனடி முடிவெடுக்கும் திறன். System 2 (சிஸ்டம் 2): ஆழமாகவும் பொறுமையாகவும் சிந்தித்து செயல்படும் திறன் (சாதாரண LLMs. அதாவது உங்க சாட் ஜிபிடி, ஜெமினி). Jev என்பது AI-ன் System 1 ஆகும். இது தேவையின்றி யோசித்து நேரத்தை வீணடிக்காமல், கொடுக்கப்பட்ட தரவை ஆய்வு செய்து சில மில்லி விநாடிகளில் சரி, தவறு என்பதை மற்றும் துல்லியமான முடிவாக வழங்கும். Jev எவ்வாறு செயல்படுகிறது? Jev மாதிரியிடம் ஒரு தரவுத் தொகுப்பு (text அல்லது JSON) மற்றும் வரையறுக்கப்பட்ட கேள்விகள் கொடுக்கப்படும். இது கேள்விகளுக்கான தெளிவான பதில்களை சாத்தியக்கூறு வரம்புகளுடன் (Probabilities) வழங்கும். 1. மூன்று அடிப்படை இதில் உண்டு CSN. Choice, Score, Noul என நியாபகம் வைக்கலாம். Choice (தேர்வு): நீங்கள் வழங்கும் பட்டியலில் இருந்து சரியான ஒரு தேர்வை மட்டும் எடுப்பது (எ.கா: வாடிக்கையாளர் மின்னஞ்சலை எந்தப் பிரிவுக்கு அனுப்ப வேண்டும்?). Score (மதிப்பெண்): நீங்கள் அமைத்த மதிப்பீட்டு விதிகளின் அடிப்படையில் தரவை வரிசைப்படுத்துவது (எ.கா: அவசரம் அல்லது அபாயத்தின் அளவு). Noul (உண்மை சாத்தியக்கூறு): ஒரு கூற்று உண்மையா அல்லது தவறா என 0 முதல் 1 வரையிலான சாத்தியக்கூறைக் கணிப்பது (எ.கா: "இது பணத்தைத் திரும்பப் கோரும் கோரிக்கையா?:அதாவது refund request. இதில் ஆமாம் அல்லது உண்டு என்ற இரண்டு பதில் தானே இருக்க முடியும்"). 2.இயங்குமுறை மற்றும் வேகம் Jev எந்த text ஐ அல்லது படத்தை புதிதாக உருவாக்குவதில்லை. மாதிரிக்கு விருப்பமான அடுத்த குறியீடு (token) எதுவென்று வரையறுக்கப்பட்டவுடன், அதன் Logit அளவீடுகளை மட்டும் படித்து முடிவை JSON வடிவில் நேரடியாக மென்பொருளுக்குத் தரும். வெளியீட்டுக் கட்டணம் 0. ஆகவே செலவு குறைவு: முன்பே சொன்னபடி இதில் புதிய சொற்கள் உருவாகாததால் (Zero output tokens), வெளியீட்டிற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. பிழையற்ற பாதுகாப்பு: நீங்கள் கொடுத்த தேர்வுப் பட்டியலைத் தாண்டி மாதிரி தவறான அல்லது தேவையில்லாத பதிலை அளிக்க முடியாது. Super fast - அதிவேகச் செயல்பாடு: சில நூறு மில்லி விநாடிகளில் பதிலளிக்கும் இதன் உள்ளீட்டுக் கட்டணம் 1 மில்லியன் டோக்கன்களுக்குச் வெறும் $0.042 மட்டுமே. பல தளங்களில் சல்லிசாக கொடுக்கிறார்கள். சில இடங்களில் இலவசம் கூட. Vercel கடந்த weekend free ஆக கொடுத்தான் அப்பவே எல்லா முயற்சியும் செய்து பார்த்து விட்டேன். நடைமுறைப் பயன்பாடுகள் மின்னஞ்சல் வேலைகள்: வாடிக்கையாளர் அனுப்பும் கோரிக்கையின் அவசரத்தைக் கணித்து, சரியான துறைக்குத் தானாகப் பிரித்து அனுப்பும். சந்தேகத்திற்குரிய கோரிக்கைகளை மட்டும் மனிதர்களின் ஆய்வுக்குத் திசைதிருப்பும். (Moderation): ஒரு பதிவு அல்லது கருத்து நிறுவனத்தின் விதிகளை மீறுகிறதா என்பதைக் கண்டறிந்து, அதை உடனடியாக அனுமதிக்கவோ, தடுக்கவோ அல்லது ஆய்வுக்கு வைக்கவோ செய்யும். (Agent Control Loop): கணிப்பொறி அல்லது பிரவுசரைப் பயன்படுத்தும் Grok Bot, muse மாதிரி தானியங்கி ஏஜென்ட்கள், அடுத்து எந்தப் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும் அல்லது எந்தக் கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். RAG : பெரிய தரவுத்தளங்களில் உள்ள தகவல்களின் பொருத்தத்தைக் கணித்து, தேவையானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை நீக்கும். பாதுகாப்பு அரண் (Guardrails): ஒரு பயனர் கொடுக்கும் கட்டளை அல்லது AI வெளியிடும் பதில் பாதுகாப்பானதுதானா என்பதை இயல்புநிலை மென்பொருள் குறியீடே முடிவெடுக்கத் துணைபுரிகிறது.

x.com/senthazalravi/status/2103051990372683925Archived 2026.09.25 10:07